AI (செயற்கை நுண்ணறிவு) என்பது ஒரு கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும். இது பொதுவாக ஒரு மனிதன் யோசித்து முடிவெடுக்க வேண்டிய சில பணிகளை மிகவும் நேர்த்தியாக செய்யும் திறன் கொண்டது. இதை செய்வதற்கு பெரிய அளவிலான தரவை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் வடிவங்களை அங்கீகரிப்பதன் மூலமும் AI கள் “கற்றுக்கொள்கின்றன”. வன்பொருள் மற்றும் மென்பொருளை இணைப்பதன் மூலம், பெரிய தரவுத் தொகுப்புகளில் உள்ள வடிவங்களை இந்த AI செயலி கற்றுக்கொண்டு மனிதர்களுக்கு கடினமான அல்லது சாத்தியமில்லாத பிரச்சனைகளையும் AIகள் தீர்க்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (AI) என்பது ஒரு மனித கலைஞரின் படைப்பு அல்லாத ஒரு படைப்பை புகைப்படமாக உருவாக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகை புகைப்படங்கள் “AI-உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் ” என்று அழைக்கப்படுகிறது. அத்தகய AI புகைப்படங்கள் யதார்த்தமாகவோ அல்லது சுருக்கமாகவோ இருக்கலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட செய்தியையும் தெரிவிக்கலாம்.
இந்நிலையில், சென்னையை சேர்ந்த ஒருவர் உருவாக்கிய AI படங்கள் இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகின்றன.
சில வாரங்களுக்கு முன்பு செயற்கை அறிவுச் செயலியின் உதவியுடன் ஒரு பெண்ணை (பச்சை நிறப் புடவையில்) உருவாக்கினேன்.
தற்போது அப்பெண்ணிற்கு மிகச்சிறிய அளவில் இரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். அதே பெண்ணை விதம் விதமான உடைகளில் காண முடியுமா என்று சிலர் கேட்டிருந்தார்கள். எனவே என்னால் இயன்ற அளவு அதே பெண்ணிற்கு விதம் விதமாக ஆடைகள் உருவாக்கி அணிவித்து அழகு பார்த்திருக்கிறேன். நீங்களும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் என்று கூறியுள்ளதுடன் முற்றிலும் AI மூலம் உருவாக்கப்பட்ட படங்களுடன் பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.