இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி நடிப்பதோடு மட்டுமல்லாமல் அவரே இயக்கவும் செய்திருக்கிறார்.
காவ்யா தாப்பர்,யோகிபாபு,ஜான் விஜய்,மன்சூர் அலிகான்,ராதாரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே தயாரித்து படத்தொகுப்பும் மேற்கொண்டிருப்பதுடன்,இத் திரைப்படம் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘பிக்கிலி’ பாடல் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றது.இந்த பாடலை விஜய் ஆண்டனி,எழுதி இசையமைத்து பாடியுள்ளார்.
இந்தப் பாடல் வீடியோவில், "தமிழ் மொழியை செழுமைப்படுத்த என்னால முடிந்த கெட்டவார்த்தை ஒன்றை கண்டுபிடித்துள்ளேன்.நான் கண்டுபிடித்த அந்த கெட்டவார்த்தை பெயர் “பிக்கிலி”.ஏழைகளின் வறுமையை பயன்படுத்தி,பணபலத்தால் அவர்கள் வயிற்றில் அடித்து அவர்களை அடிமையாக்கி,பணத்திமிரில் ஆடுபவர்கள் தான் பிக்கிலி” இவங்களை அடிக்க முடியாவிட்டாலும் நாம் அடையாளப்படுத்தலாம்” என விஜய் ஆண்டனி குறிப்பிட்டிருக்கும் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்படும் விடயமாக மாறியிருக்கிறது.