பிரபல கர்நாடக இசைக் கலைஞர் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாடகி பொம்பே ஜெயஸ்ரீ இசையமைப்பாளர்களான இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஷ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் இசையில் பொம்பே ஜெயஸ்ரீ பாடல்களை பாடியுள்ளார். அதுமட்டுமின்றி வெளிநாடுகளிலும் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடி வந்தார்.
இந்தநிலையில் லண்டனில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நிலையில் லிவர்பூல் ஹோட்டலில் தங்கியிருந்த வேளை அங்கு அவருக்கு நேற்று இரவு முதல் கழுத்து வலி இருந்துள்ளது. இதையடுத்து அவர் ஹோட்டல் அறையில் சுயநினைவின்றி மயங்கி கிடந்துள்ளார்.
இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ரத்தக் கசிவு ஏற்பட்டதாக கூறியுள்ளனர். புகழ் பெற்ற பின்னனி பாடகியான இவருக்கு 2021 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.