Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
நாவுக்கு சுவையான கடப்பா சட்னி !

sooriyan fm gossip - நாவுக்கு சுவையான கடப்பா சட்னி !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

168 Views

பொதுவாக சட்னி என்றாலே தக்காளி சட்னி தேங்காய் சட்னி போன்றவற்றை தான் நாம் அதிகமாக சாப்பிட்டிருப்போம். 


இன்று சற்று வித்தியாசமாக இட்லி தோசைக்கு சாப்பிடக்கூடிய காரமான கடப்பா சட்னி
எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த சட்னியை இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம் .

தேவையான பொருட்கள் - சின்ன வெங்காயம் - 75 கிராம், தக்காளி - 2, பூண்டு - 6 பற்கள், காய்ந்த மிளகாய்- 12, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - 1/4 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை - 1 கொத்து, நல்லெண்ணெய் - தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை - முதலில் பூண்டு, சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் தக்காளியை சிறிதாக வெட்டிக்கொள்ள வேண்டும். பின்னர் மிக்சியில் வெங்காயம், பூண்டு, மிளகாய் ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அதே மிக்சியில் தக்காளியுடன் புளியையும் சேர்த்து அதனையும் அரைத்து தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் போன்றவற்றை சேர்த்து தாளித்த பின், அரைத்து வைத்துள்ள வெங்காய பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் அரைத்து வைத்த தக்காளி பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கி சட்னியின் காரத் தன்மை போகும் வரை அடுப்பின் தீயினை மிதமாக வைத்து கொதிக்க வைக்க வேண்டும். சட்னியில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைத்து விட்டு, பின் அடுப்பில் இருந்து இறக்கினால் சூப்பரான காரமான கடப்பா சட்னி தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு



Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top