இந்தத் திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இம்மாதம் 30 ஆம் திகதி திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'பத்து தல' திரைப்படத்தின் புதிய அறிவிப்பாக,இப்படத்தில் நடிகை சாயிஷா நடனமாடியுள்ள "ராவடி" என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.சிநேகன் எழுதியுள்ள இந்தப்பாடலை சுபா, நிவாஸ் இணைந்து பாடியுள்ளனர்.
இந்தப்பாடலை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.