வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்ற இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி வெளியாக உள்ளது.விக்ரம் ,கார்த்தி,ஜெயம்ரவி ,த்ரிஷா ,ஐஸ்வர்யா ராய் ,சரத்குமார்,பார்த்தீபன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டின் ட்ரைலர் இம்மாதம் 29 ஆம் திகதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இடம்பெறும் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.
பொன்னியின் செல்வன் பாகம் இரண்டின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இம்மாதம் 29ம் திகதி இடம்பெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. எனினும் இவ்விழா எங்கு நடைப்பெறும் என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.