Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
நண்டு மசாலா செய்வது எப்படி...?

Sooriyan Gossip - நண்டு மசாலா செய்வது எப்படி...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

564 Views
அசைவ சாப்பாடு என்றால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.


அசைவத்தில் பலவித உணவுகள் உள்ளன , கோழி, இறால், நண்டு, என்று அடுக்கி கொண்டே போகலாம்.

ஆனால் அசைவ உணவுகள் சாப்பிடுவதில் பெரும்பாலும் கடல் உணவு பிரியர்கள் தான் அதிகமாக இருப்பார்கள்.

இன்று ஹோட்டல் சுவையில் காரசாரமான நண்டு மசாலா செய்வது எப்படி என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் : நண்டு - அரை கிலோ, தக்காளி - ஒன்று, சின்ன வெங்காயம் - 25 கிராம், பச்சை மிளகாய் (சிறியது) - 2, கறிவேப்பிலை - ஒரு கொத்து, சோம்பு - ஒரு தேக்கரண்டி , எண்ணெய் - 3 தேக்கரண்டி, பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, குழம்பு மசாலா - 2 தேக்கரண்டி, தேங்காய் - கால் மூடி, மிளகு - ஒரு தேக்கரண்டி, பூண்டு - 5 பல், உப்பு - தேவையான அளவு

செய்முறை: நண்டை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு தக்காளி, சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.

ப.மிளகாயை கீறி வைத்து கொள்ளவும். தேங்காய், மிளகு, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு சுத்தம் செய்த நண்டுடன் குழம்பு மசாலா, சிறிதளவு உப்பு சேர்த்துப் பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் கீறிய பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

வெங்காயம் வதங்கிய பிறகு அதில் தக்காளி சேர்க்கவும். தக்காளி குழைய வதங்கியதும் பிசைந்து வைத்த நண்டை சேர்த்துக் கிளறவும்.

பின்பு , அரைத்து வைத்த தேங்காய் விழுதை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிடவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வந்தவுடன் இறக்கினால்... சுவையான நண்டு மசாலா தயார்.

இதனை சூடான சாதத்தோடு சாப்பிட்டால்... சுவையில் அள்ளும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top