"இராவண கோட்டம்"திரைப்படத்தின் first look போஸ்டர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.சில தினங்களுக்கு முன்பு இந்த திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டிருந்தார். இந்த திரைப்படம் வருகின்ற மே 12ம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது.இந்த நிலையில் இராவண கோட்டம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள "அத்தனபேர் மத்தியில" பாடலை நடிகர் ஜெயம் ரவி சமூக வலைத்தளத்தின் வாயிலாக வெளியிட்டார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.