போலந்தில் உள்ள ஒரு விசித்திரமான நகரத்தில் ட்ரோன் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படமே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கு 6000 பேர் ஒரே தெருவில் வசிக்கின்றனர்.
சுலோசோவா என்ற தெற்கு போலந்தின் கிராகோ கவுண்டியில் அமைந்துள்ள இந்த பகுதியானது அடிப்படையில் ஒரு தெருவைச் சுற்றி கூட்டமாக மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும். இது போலந்தில் மிக நீளமான ஒரு கிராமமாக கருதப்படுகின்றது.
முழு கிராமத்திலும் ஒரே ஒரு நீண்ட தெரு மாத்திரமே உள்ளது. அனைத்து வீடுகளும் தெருவின் இருபுறமும் அமைந்திருக்கின்றன. 2017ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்த இடத்தின் மக்கள் தொகை 5819 ஆக இருந்தது. எனினும், கடந்த சில ஆண்டுகளாக இங்கு வசிக்கும் இளைஞர்களில் பலர் தங்கள் படிப்பு அல்லது வேறு காரணங்களுக்காக வெளியேறியதால் இந்தக் கிராமத்தின் மக்கள் தொகை குறைந்து கொண்டே வருகிறது.
குறித்த இந்த கிராமம் 6 ஆம் நூற்றாண்டில் போலந்து இராஜ்ஜியத்தின் கிரீடத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உயர்குடி இராணுவ அதிகாரியால் நிறுவப்பட்டது என்று நம்பபப்படுகிறது.