“சினிமாவுக்கு நல்ல பொற்காலம் தொடங்கியிருப்பதாக நினைக்கின்றேன்” என ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படத்தைப் பார்த்த பின்பு,நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
திரையரங்கில் ‘பொன்னியின் செல்வன் 2’ படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “என்னுடைய முதல் விருப்பம் ஆசையெல்லாம் நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும் என்பதுதான்.அத்தகைய ஒரு சினிமாவாக ‘பொன்னியின் செல்வன்’ அமைந்துள்ளது.இதனை நான் ஒரே படமாகத்தான் பார்க்கிறேன்.இதை நாம் ஒரு முழு காவியமாகத்தான் எடுத்துகொள்ள வேண்டும்.
மாற்றுக் கருத்துகள் எல்லா படங்களுக்கும் இருக்கும்.அந்த மாற்றுகருத்து இந்தத் திரைப்படத்தில் இருந்தாலும் கூட மக்கள் இதனை பெரியதாக ஆதரிக்கிறார்கள் என்பதை நான் அறிகிறேன்.
தமிழ் சினிமாவின் பெருமை மற்றும் தமிழரின் பெருமையைப் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க தனித் துணிச்சல் வேண்டும்.அதனை எடுத்து முடித்திருக்கும் முக்கியமான வீரன் மணிரத்தினத்திற்கும்,அவருக்கு உறுதுணையாக தோள் கொடுத்து,வாள் கொடுத்து உதவிய நட்சத்திர பட்டாளப் படைக்கும்,எனது வாழ்த்துக்களை கூறிக்கொள்கிறேன் என,தனது வாழ்த்துக்களை பகிர்ந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன்.