ஒரு வருடத்தை கடந்து இடம்பெற்றுவரும் உக்ரைன் , ரஷ்ய போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருக்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சி செய்துவருகின்றன.
இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையிலான போர் காரணமாக உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைனை நம்பியிருந்த நாடுகள் வெகுவாக பாதிப்படைந்துள்ளன.
இந்நிலையில் உக்ரைன் போரினால் டிசம்பர் மாதம் முதல் தற்போதுவரை 20 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்கா கணித்துள்ளது.
இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆகியன ஆதரவு அளித்து வருகின்றன.
உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கிவரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன.
பொருளாதார தடைகளை விதித்தாலும் எண்களின் ஆக்கிரமிப்பு தொடருமென ரஷ்யா தெரிவித்து தொடர்ந்தும் போரிட்டு வருகிறது.
ரஷ்யாவும் உக்ரைனும் அமைதி பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்று இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் ஆயுத உதவியால் இந்த போர் பல மாதங்களாக நீடித்து வருகிறது.
போர் தொடங்கியது முதல் கடந்த நவம்பர் மாதம் வரை 1 இலட்சம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியது.
இந்நிலையில் இந்த புதிய தரவுகளை அமெரிக்க வழங்கியுள்ளது. ரஷ்யா அமெரிக்காவின் கருத்துக்கு இதுவரை எவ்விதமான கருத்துகளையும் வெளியிடவில்லை.
ரஷ்யாவும் உக்ரைனும் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும் அமெரிக்க , பிரித்தானிய ஆய்வாளர்கள் அடிக்கடி இப்படியான தரவுகளை வெளியிட்டு கொண்டிருக்கிறார்கள்.