Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
02
உடல் எடையை குறைக்கும் கடலை மா அடை...!

SooriyanFM Gossip - உடல் எடையை குறைக்கும் கடலை மா அடை...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

477 Views
உடல் எடையை குறைக்க, கடலை மாவை வைத்து, சுவையான அடை 15 நிமிடத்தில் செய்து விடலாம்.
 சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைராய்டு பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்.

இந்த உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைப்பதற்கும் இது ஒரு சுவையான உணவு.

தேவையான பொருட்கள்: கடலை மா - 1 கப் தக்காளி - 1 கரட் - 1 சின்ன வெங்காயம் தோலுரித்து - 10 இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 4 பல் மிளகு, சீரகம் - 1 தேக்கரண்டி, நன்றாக பொடி செய்தது, மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 1 மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, ஓமம் - 1/2 தேக்கரண்டி, இடித்தது உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு.

செய்முறை - தக்காளி, கரட், சின்ன வெங்காயத்தை கொரகொரப்பாக ரவை பதத்திற்கு அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் ஊற்ற வேண்டாம் விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

பூண்டை துருவிக்கொள்ளவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பின்பு மிளகு, சீரகத்தை பொடித்துகொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவைப் போட்டு, அரைத்த விழுது, துருவிய பூண்டு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை , ப.மிளகாய், இஞ்சி, பொடித்த மிளகு, சீரகம், மிளகாய் தூள், ஓமம், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் விட்டு அடை மா பதத்திற்கு மாவை கரைத்து கொள்ள வேண்டும்.

அடை மா பதம் தெரியாதவர்கள் இட்லி மா பதத்திற்கு கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீரை மொத்தமாக ஊற்றி கடலை மாவைக் கரைத்தால், கட்டி கட்டியாக ஆகிவிடும். ஆகவே, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, உங்கள் கைகளை போட்டு நன்றாக பிசைந்து அடை மா பதத்தில் மாவைத் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

5 நிமிடம் மாவை ஊறவைத்து விட்டு, அதன் பின்பு, தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடைகளாக ஊற்றி சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் சூப்பரான கடலைமா அடை தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top