ஓடும் லொறியில் இருந்து திருடன் ஒருவன் ஆடுகளை திருடும் காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் தமிழ்த் திரைப்படமான களவாணி திரைப்பட பாணியில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. ஓடும் லொறியில் பின்பக்கமாக ஏறிய நபர் ஒருவர் சுமார் 10 ஆடுகளை பரபரப்பான நெடுஞ்சாலையில் தூக்கி வீசியதுடன் அதன்பின்னர் லொறியில் இருந்து தான் வந்த கார் மூலம் இறங்கி அந்த ஆடுகளை கடத்திக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
சினிமாவில் வரும் கடத்தல் காட்சிகளை மிஞ்சும் வகையில் பரபரப்பாக நடைபெற்ற இந்த சம்பவத்தின் காணொளிகள் பாதையில் பயணித்த வேறொரு நபரினால் பதிவுசெய்யப்பட்டு அவை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.