2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்திலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பிலும் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'.
இந்த திரைப்படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், பொபி சிம்ஹா, அசோக்செல்வன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
நகைச்சுவை பாணியில் உருவாகியிருந்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து 'சூது கவ்வும் 2' திரைப்படத்தை இயக்குநர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகின்றார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் இரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.