இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் 'தங்கலான்'.
இந்த திரைப்படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இத்திரைப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விக்ரமிற்கு 'தங்கலான்' படப்பிடிப்பின் போது விபத்து நடந்துள்ளதாக விக்ரமின் மேலாளர் சூர்யா நாராயணன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "விக்ரம் 'தங்கலான்' படப்பிடிப்பிற்காக ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டத்தில் காயம் ஏற்பட்டு விலா எலும்பு முறிந்துள்ளது. இதனால் அவரால் சிறிது காலம் படப்பிடிப்பில் ஈடுபட முடியாது என்றும் விரைவில் அவர் குணமடைந்து படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என உறுதியுடன் இருக்கிறார்" என்றும் பதிவிடப்பட்டுள்ளது.