இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2 கொடியே 25 இலட்சம் பேர் இறந்துள்ளனர். அதேநேரம் 4 கொடியே 50 இலட்சம் பேர் இதுவரை பிறந்துள்ளார்.
இறப்பும் பிறப்பும் சம அளவு இருந்தால் மாத்திரமே சமநிலை தன்மை இருக்கும். இறப்பு என்று வருகின்ற பொது இயல்பாகவே ஒருவித பயம் வந்துவிடுகிறது.
நாம் உயிரிழக்கும் போது என்ன நடக்கும் என்பது இதுவரை பெரிய மர்மமாகவே இருந்து வருகிறது. உயிரிழந்த பிறகு என்ன ஆகும் என்பதற்கு ஒவ்வொரு மதங்களிலும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கிறது.
ஒரு நபர் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள், நான்கு நோயாளிகள் உயிரிழக்கும் போது, அவர்கள் மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்தனர்.
அவர்கள் மூளையில் ஏற்படும் எலக்ட்ரோஎன்செபலோகிராம் (EEG) மற்றும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (ECG) சிக்னல்களை ஆய்வு செய்தனர்.இதில் இரண்டு நோயாளிகளில் காமா செயல்பாடுகளால் குளோபல் ஹைபோக்ஸியா ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இது பற்றி அவர்கள் குறிப்பிடுகையில் உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது. இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது.
உயிரிழக்கும் போது, மனித மூளையில் பின்புற கார்டிகல் பகுதிகள் செயல்படுத்தப்படுகிறதா என்பது நாம் இன்னும் தீர்மானிக்கவில்லை. விரிவான ஆய்வுகளை நடத்த வேண்டும். காமா அலை ஆரம்பத்தில் மூளையின் வெப்ப மண்டலம் என்று அழைக்கப்படும் ஒரு பகுதியில் அமைந்திருந்தது.
உயிரிழக்கும் சமயத்தில் நமது மூளை மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதையே இது காட்டுகிறது. எனவே, மாரடைப்பு என்பது இதயத்தை மட்டும் பாதிக்காமல் மூளையிலும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டுள்ளது.
இன்னும் பல கட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.