அவுஸ்திரேலியாவை சேர்ந்த நபர் ஒருவர் வைத்தியர்களால் மரணித்ததாக கூறப்பட்டு 28 நிமிடங்களின் பின்னர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
தற்காப்பு கலைப் பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் அண்மையில் தனது மகனுடன் கூடைப்பந்து விளையாடிக்கொண்டிருக்கும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதன் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. இருந்தபோதிலும் அவரின் இதயதுடிப்பு நின்றதையடுத்து, மருத்துவர்கள் அவர் இறந்ததாக அறிவித்தனர். அதன் பின்னர் சுமார் 28 நிமிடங்களின் பின்னர் உயிருடன் மீண்டுவந்தார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தியதுடன் , எனது உடலில் இருந்து ஏதோ ஒன்று வெளியே வந்து பறக்க தொடங்கியது போல நான் உணர்ந்தேன். அப்போது என்னை உயிர்ப்பிக்க செவிலியர் ஒருவர் முயற்சி செய்தார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி எதுவும் நினைவில் இல்லை” என தெரிவித்தார். வாழ்வில் இரண்டாவது முறை தனக்கு வாழ்வதற்கு இறைவன் வாய்ப்பு ஒன்றை வழங்கியுள்ளதாகவும் சிறு விடயங்களை பற்றி கவலைப்படாது தனது வாழ்வை அமைத்துக்கொள்ளவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.