ரஜினிகாந்தின் 169வது திரைப்படமாக பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தை,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது,இத் திரைப்படத்தில்,கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், தமன்னா, சுனில், ரம்யா கிருஷ்ணன் ,மோகன்லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
'ஜெயிலர்' திரைப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில்,இன்று மாலை 6 மணிக்கு படத்தின் புதிய அப்டேட் வெளியிடப்படும் என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
'ஜெயிலர்' படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முடிவடைந்து,தற்போது தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டது.
அனேகமாக இன்று மாலை ஆறு மணிக்கு ஜெயிலர் படத்தின் வெளியீட்டுத் திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.