நடிகர் யாஷ் நடிப்பில் கோலார் தங்க வயல் பின்னணியில் 'கேஜிஎப்' என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாக சாதனை படைத்திருந்தது.
இதே போன்று கேஜிஎப் இரண்டாம் பாகமும் திரைக்கு வந்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
விக்ரம் நடிப்பில் தயாராகி வரும் தங்கலான் திரைப்படமும் கேஜிஎப் பின்னணி கதை என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் தமிழில் வெற்றி மாறன் இயக்கத்தில் இன்னொரு கேஜிப் திரைப்படம் உருவாக இருப்பதாகவும் இந்த திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்கு நடிகர் என்.டி.ஆரையும் இதில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
மீண்டும் இருவரும் கேஜிஎப் கதையம்சம் உள்ள திரைப்படத்தில் இணைய இருப்பதால் இந்த திரைப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதோடு இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.