அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'.
விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படத்தில்,அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்.மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி இந்த் திரைப்படம் வரும் மேமாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடிகர் விஜய் சேதுபதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.