நடிகர் சாந்தனு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் "இராவண கோட்டம்".இயக்குநர் விக்ரம் சுகுமாறன் இப்படத்தினை இயக்கியுள்ள அதேவேளை நடிகை கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார்.
"இராவண கோட்டம்" திரைப்படமானது வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. அண்மையில் இப்படத்தின் First Look போஸ்டர் ,டீசர்,பாடல்கள் என்பன வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் "இராவண கோட்டம்" திரைப்படத்தின் Title Track Lyrical பாடலை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது Twitter பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இந்தப் பாடலை பாடகர் திவாகர் பாடியுள்ளார்.பாடலாசிரியர் K ஏகாதசி வரிகளை எழுதியுள்ளார்.இப்பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.