'ராஜா ராணி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குநராக அறிமுகமான அட்லீ, அதன் பின்னர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து திரைப்படங்களை இயக்கினார்.
தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கி வருகின்றார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படத்தின் மூலம் பொலிவுட் திரைப்பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகின்றார். 'ஜவான்' திரைப்படம் ஜுன் மாதம் வெளியாகும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.