தமிழில் ராஜா ராணி,மெர்சல், தெறி, பிகில் போன்ற படங்களை இயக்கி திரையுலகில் தனக்கான இடத்தை பிடித்துக்கொண்டவர்.
இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' திரைப்படத்தை இயக்கிவரும் நிலையில்,இந்தத் திரைப்படம் வரும் செப்டம்பர் 7ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு இயக்குநர் அட்லீயும்,நடிகை பிரியாவும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில்,இவர்களுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில்,அட்லீ -பிரியா தம்பதியினர் தங்களது குழந்தையின் பெயரை சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்துள்ளனர்.
அதன்படி,இவர்கள் தங்கள் குழந்தைக்கு 'மீர்' என பெயர் வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர் மேலும், குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
இந்தப் பதிவு,தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன்,அட்லீ -பிரியா தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.