இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படம் என்பதால் இத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் Action King அர்ஜுனுக்கு சண்டை காட்சி வைக்கப்பட்டுள்ளதோடு அர்ஜுனின் பாதி முகத்தை prosthetic மேக்கப் வைத்து மாற்றியமைத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். 2005 ஆம் ஆண்டு வெளியான ஆங்கில திரைப்படமான 'A History of Violence' திரைப்படத்தில் வரும் Edie Stall எனும் கதாபாத்திரத்திற்கு ஒரு பக்க முகம் சிதைந்துபோனது போல் இருக்கும். எனவே 'லியோ' திரைப்படம் அந்த திரைப்படத்தின் தழுவலாக இருக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் படக்குழு இதற்க்கு எந்த பதிலும் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.