'மதயானைக் கூட்டம்' திரைப்படம் வெளியாகி சுமார் 6 ஆண்டுகள் கழித்து விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'இராவண கோட்டம்'.
ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் சாந்தனு கதாநாயகனாக நடிக்கின்றார்.
இந்த திரைப்படம் முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வருகின்றது. சமீபத்தில் 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர், டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி இரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளங்களில் வைரலாகியிருந்தது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. அதன்படி 'இராவண கோட்டம்' திரைப்படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. சித்ரவேல் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் இளவரசுவும், மதிவாணன் என்ற கதாபாத்திரத்தில் சஞ்சய் சரவணனும் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.