நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "தீராக் காதல்".இந்தத் திரைப்படத்தினை இயக்குநர் ரோகின் இயக்கும் அதேவேளை ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் மற்றும் First Look போஸ்டர் என்பன அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்த நிலையில் , "தீராக் காதல்" திரைப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டிரைலர் இன்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.