தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித். இவர் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடிக்க இருக்கின்றார்.
இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதத்தில் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்தில் நடிகர் அஜித் நேபாளம் மற்றும் பூட்டான் போன்ற இடங்களில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் இணையத்தில் வெளியாகி வைரலகியிருந்தது.
இந்த நிலையில் நடிகர் அஜித் தன்னுடைய இரண்டாம் கட்ட உலக சுற்றுப்பயணத்தை நவம்பர் மாதத்தில் தொடங்குவார் என அவருடைய மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் நடிகர் அஜித்தின் இரசிகர்கள் , வரைபடத்தில் அஜித் நிற்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.