இசையமைப்பாளர், நடிகர், பாடகர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வரும் விஜய் ஆண்டனி, தற்போது "பிச்சைக்காரன் 2" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில்,விஜய் ஆண்டனி இரட்டை வேடத்தில் நடித்துள்ளதாக கூறப்படும் நிலையில்,"பிச்சைக்காரன் 2" திரைப்படம் இம்மாதம்19 ஆம் திகதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
இந்நிலையில்,"பிச்சைக்காரன் 2" திரைப்படத்தின் வெளியீடு நெருங்கி வருவதால் அதன் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.அதன்படி "பிச்சைக்காரன் 2" திரைப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
"நாநா புலுக்" என வித்தியாசமான பெயருடன் கூடிய இப்பாடலைப் பார்த்த ரசிகர்கள் "மஸ்காரா" பாடலுக்கு போட்டியாக இந்த பாடல் அமைந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.