பிரேசில் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய விவாகரத்தைக் கொண்டாட சென்ற நிலையில் அவருக்கு நடந்த எதிர்பாராத விபத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
22 வயதான குறித்த இந்த இளைஞர் ப்ரிட்ஜ் ஸ்விங்கில் பங்கேற்பதற்காக பிரேசிலில் உள்ள கேம்போ எனும் பிரபலமான சுற்றுலாத்தலத்திற்கு சென்றிருந்தார். இதன் போது கயிறு அறுந்ததால் 70 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த நிலையில் காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளார். விபத்திலிருந்து தப்பிய இவர் நான் எப்போதும் மிகவும் அமைதியான நபராக இருப்பேன். ஆனால் சமீபத்தில் எனது நிலைமை மாறிவிட்டது என்று தெரிவித்துள்ளார். மேலும் விவாகரத்துக்குப் பிறகு, நான் எல்லா வகையிலும் வாழ்க்கையை அனுபவிக்க விரும்பினேன். சந்தோசமான விடயங்களைச் செய்து கொண்டிருந்தேன். என் வாழ்க்கையின் மதிப்பு திருமணமான நாட்களில் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். நம் வாழ்க்கை ஒருபோதும் ஒரே மாதிரியாக இருக்காது. நான் இப்போது உயிருடன் இருப்பதற்கு நன்றி சொல்ல வேண்டும், இது இறைவனின் மிகப்பெரும் அருட்கொடை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறித்த இந்த சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.