இராஜமௌலி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான ‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கீரவாணி இசையமைத்திருந்த இத்திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் ஒரிஜினல் பாடலுக்கான பிரிவில் ஒஸ்கார் விருதை வென்றது.
உலக அளவில் இத்திரைப்படம் ரூபாய்.1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருந்த நிலையில், ஜப்பானில் மட்டும் 200 நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளது. அதேவேளை தற்போது 'ஆர் ஆர் ஆர்' திரைப்படம் ஜப்பானில் மட்டும் ரூபாய்.119 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இத்திரைப்படம் ஜப்பானில் அதிகம் வசூலித்த இந்தியத்திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.