தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி - 1 கப்
பாசிப்பருப்பு- 1/2 கப்
இஞ்சி -1 துண்டு
பச்சை -மிளகாய் 2
சீரகம்- 1 டீஸ்பூன்
மிளகு- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை தேவையான அளவு
முந்திரி- 12
நெய் -1/4 கப்
பால் -1/4 கப்
பெருங்காயத்தூள் -1 டீஸ்பூன்
செய்முறை:
முதலில் பச்சை அரிசியை நன்கு கழுவி 1/4 மணி நேரம் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு பச்சையரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு வறுத்த பாசிப்பருப்பை 1/4 மணி நேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
இப்போது ஒரு பாத்திரத்தில் 6 கப் தண்ணீர் ஊற்றி ஊற வைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பை சேர்க்க வேண்டும்.
பின்பு பால் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
அரிசி மற்றும் பருப்பு நன்கு குழைந்ததும் அதை கிளறி விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு கடாயில் இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதனோடு 3 டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நெய்யும் எண்ணெய்யும் நன்கு காய்ந்த பின்பு மிளகு, சீரகம்,பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி, பெருங்காயத்தூள் ஆகியவற்றை நன்கு கலந்துவிட்டால் இப்போது சுவையான வெண்பொங்கல் தயார்.