இயக்குநர், நடிகர் என பன்முகத் திறமை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டவர்.
மணிரத்னம் இயக்கத்தில் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'பொன்னியின் செல்வன் -2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில்,இந்த ஆண்டு புதிய படம் இயக்கவுள்ளதாக பார்த்திபன் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தனது புதிய திரைப்பட பணியில் பார்த்திபன் தீவிரமாக ஈடுப்பட்டுள்ளார்.இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில்,படப்பிடிப்பிற்காக இடங்கள் பார்ப்பதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.