SooriyanFM Gossip - துருக்கி டீக்கடையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் பலி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
536 Views
துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடைக்கு டீ குடிக்கவந்த இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசியவேளை அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் தகராறு அதிகமாகி ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பு துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.