தமிழ் திரையுலகில் நடிகராக மட்டுமல்லாது பாடலாசிரியர்,பாடகர் என வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.இவர் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் "மாவீரன்" திரைப்படத்தில் தற்போது நடித்து வருகின்றார்.இப்படத்தின் கதாநாயகியாக அதிதி சங்கர் நடிக்கிறார்.
மேலும் மாவீரன் திரைப்படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் 'மாவீருடு' எனும் பெயரில் வெளியாகவுள்ளது.இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படமானது ஜூலை மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு மாவீரன் படக்குழு புதிய போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.