இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பதோடு,இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்துள்ளனர்.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'பர்ஹானா' திரைப்படம் இம்மாதம் 12 ஆம் திகதி திரைக்கு வந்த நிலையில்,இந்த திரைப்படத்தில் இஸ்லாமியப் பெண்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து, 'பர்ஹானா' திரைப்படத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் ஆகியோர் வீடுகளுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.