தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் தற்போது "போர் தொழில்" எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தில் சரத்குமார், நிகிலா விமல் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்றைய தினம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.