இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜயின் லியோ திரைப்படத்தில் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் இணைந்திருப்பது இரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
‘லியோ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்ற நிலையில் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் மேனன், மிஷ்கின், பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த நிலையில் தான் பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் முத்து இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து தனது சமூக வலைத்தளத்தில் தான் ஏற்கனவே நடித்த ’மீசைய முறுக்கு’ ’வீட்ல விசேஷம்’ திரைப்படத்தில் நடித்ததோடு ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார்.