தனது கால்களில் பாதணி அணியாமல் வெறும் வெள்ளை நிற காலுறைகளை அணிந்து கொண்டு வீதியில் வலம் வந்தும் அவருடைய காலுறைகள் எவ்விதத்திலும் அழுக்கடையவில்லை.
வெற்றிக்கொடிகட்டு திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடித்த கதாபாத்திரத்தை யாராலும் மறக்க முடியாது. அதில் ஒரு காட்சியில் டுபாயில் இருக்கும் வீதிகளின் தரம் மற்றும் சுத்தத்தை கூறும் அவர், அவை கண்ணாடி மாதிரி இருக்கும் என்றும் அதில் உணவை வைத்து சாப்பிட முடியும் என்றும் அவ்வளவு சுத்தம் என்றும் கூறுவார். வடிவேலுவின் இந்த காமெடியை உண்மையாக்குவது போன்று ஒரு வினோதமான செயலையே இந்த டிக்டொக் பிரபலமும் செய்துள்ளார்.
தனது காலுறைகள் மீது தூசியோ, அழுக்கோ படியாமல் வெள்ளை நிறத்திலேயே இருப்பது அவர் வெளியிட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் தெளிவாக விளங்குவதுடன் இந்த காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்படுகிறது.
மேலும் டுபாய் அரசு மற்றும் மக்களின் செயற்பாட்டை வெகுவாக பாராட்டி அதிகமானோர் கருத்துக்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
உலகின் மிக தூய்மையான நகரம் என்ற பெருமையை தொடர்ச்சியாக மூன்று முறை டுபாய் பெற்றுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அந்த நாட்டு மன்னர் தூய்மை என்பது டுபாய் மக்களின் பண்பாடு, கலாசாரம் மற்றும் நம்பிக்கையின் முக்கிய அங்கம் என்றும், நகரின் பாதுகாப்பு மற்றும் தூய்மையை உறுதிபடுத்த தனது அரசு உறுதி பூண்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.