Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பேபி கோர்ன் சூப்....!

Sooriyan Gossip - உடலில் உள்ள கொழுப்பை குறைக்க உதவும் பேபி கோர்ன் சூப்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

316 Views
இன்று உடலுக்கு ஆரோக்கியம் தரும் பேபி கோர்ன் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.


பேபி கோர்னில் குறைவான கலோரிகள் காணப்படுகிறது. அத்தோடு ஃபோலிக் அமிலம் அதிகாக நிறைந்துள்ளது.

மேலும் பேபி கோர்னில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து நம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது.

இப்போது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் - பேபி கோர்ன் - 6 இஞ்சி (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பூண்டு (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 தேக்கரண்டி முட்டைக்கோஸ் (பொடிதாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி காளான் (பொடிதாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி சோளமா - 2 தேக்கரண்டி, தண்ணீர் - 5 கப் எண்ணெய் - தேவைக்கு உப்பு - தேவைக்கு செய்முறை: பேபி கோர்னை நீளவாக்கில் நறுக்கிக்கொள்ளவும்.

பின்பு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு 2 நிமிடம் வதக்கவும்.

பின்பு அதில் பேபி கோர்ன், குடைமிளகாய், காளான், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டு மேலும் 3 நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் அதில் 4 கப் தண்ணீர் ஊற்றி கலந்து நன்றாகக் கொதித்தவுடன் தீயைக் குறைக்கவும்.

சோளமாவை 1 கப் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைக்கவும்.

அதை பேபி கோர்ன் கலவையில் ஊற்றி, சூப் நன்றாகக் கொதித்து கெட்டியாகும் வரை கிளறவும்.

பின்னர் அதில் முட்டைக்கோஸைப் போட்டுக் கிளறி இறக்கவும். இப்போது சூடான பேபி கோர்ன் சூப் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top