தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் "காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்"விருமன்,கொம்பன் ,கொடிவீரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் முத்தையாவின் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாகி வருகின்றது.
மேலும் இப்படத்தின் கதாநாயகியாக சித்தி இத்னானி நடித்துள்ளார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள நிலையில் இப்படத்தின் பாடல் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.
இந்நிலையில் இப்படத்தின் Trailer நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியுள்ளது. இலட்சக்கணக்கான பார்வையாளர்களை கடந்து இந்த Trailer இணையத்தில் வைரலாகிக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.