2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனால் இப்படத்தினை தொடர்ந்து "பிச்சைக்காரன் 2 " திரைப்படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றது.
"பிச்சைக்காரன் 2 " திரைப்படத்தில் விஜய் ஆண்டனியோடு இணைந்து காவ்யா தப்பார், ராதா ரவி, மன்சூர் அலிகான், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தத் திரைப்படம் இம்மாதம் 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.இந்நிலையில் "பிச்சைக்காரன் -2 " திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் தமிழில் ரூ.3.25 கோடியும் தெலுங்கில் ரூ 4.5 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை விஜய் ஆண்டனி போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளார்.