ஏ.ஆர். ரகுமான் இசையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு பாடியுள்ள பாடலை தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருப்பதாக நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ளது மாமன்னன் திரைப்படம்.
இதேவேளை கடந்த 19 ஆம் திகதி மாலை ஏ.ஆர். ரகுமார் இசையில், யுகபாரதி வரிகளில் வடிவேலு பாடியுள்ள 'ராசா கண்ணு..' பாடல் வெளியானது.
மாமன்னன் திரைப்படத்தின் முதல் பாடலான இந்த பாடல் இரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.இதேவேளை நடிகர் சூரி இந்த பாடல் பற்றி தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது ‘’தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கிறேன், மனதை என்னமோ செய்கிறது இந்த பாடல் படக்குழுவினருக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் ‘’ என்று தெரிவித்துள்ளார்.