பொதுவாக தங்களுக்கு பிடித்த உருவங்கள் மற்றும் நபர்களின் பெயர்களை கைகள், கால்கள், முதுகு, மார்பு போன்ற உடல் பகுதிகளில் அதிகளவானோர் பச்சை குத்திக்கொள்வர்கள். ஆனால் பெண் ஒருவர் தனது கணவரின் பெயரை நெற்றியில் பச்சை குத்தியுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இந்தியாவின் பெங்களூரில் உள்ள பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரே இதனை செய்துள்ளார். தனது வாழ்க்கை துணையிடம் காதலை வெளிப்படுத்த பலரும் பல்வேறு விதமான செயல்களை செய்கின்றனர். இதனடிப்படையிலேயே தனது கணவர் மீதான காதலை வெளிப்படுத்த தாம் இதனை செய்துள்ளதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இந்த புகைப்படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.