முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் வசூல் விபரம் தற்போது வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, இசையமைத்து நடித்திருக்கும் 'பிச்சைக்காரன் 2' திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
விஜய் ஆண்டனி நடிப்பில் சசி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன 'பிச்சைக்காரன்' திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு பிரமாண்டமான வசூலையும் பெற்றது.இந்தநிலையில்
'பிச்சைக்காரன் 2' வெளிவந்து தற்போது மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் இதுவரை உலக அளவில் ரூ. 22 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.