கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிகர் சிம்பு நடிக்கவுள்ளார்.இந்த திரைப்படம் சுமார் 100 கோடி செலவில் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
"STR 48" என்று தற்காலிகமாக இந்தத் திரைப்படத்திற்கு பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில்,
வரலாற்று பின்னணிக் கொண்ட திரைப்படமாக இந்த திரைப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் நடிகர் சிம்பு இந்த திரைப்படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த திரைப்படத்திற்காக தாய்லாந்து சென்ற நடிகர் சிம்பு இரண்டு மாதங்கள் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்றதாகவும் அதன்பிறகு சமீபத்தில் லண்டன் சென்று சில தற்காப்பு பயிற்சிகளை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் பணிகள் தொடங்கியுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது.இதையொட்டி கமல்ஹாசனை நடிகர் சிம்பு சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.