Database Error
Message:Could not set characterset as utf8.
MySQL Error:Access denied; you need (at least one of) the SUPER, SYSTEM_VARIABLES_ADMIN or SESSION_VARIABLES_ADMIN privilege(s) for this operation
Date:Thursday, April 18, 2024 at 7:27:10 AM
Script:/24680/2023/05/sooriyan-gossip.html
சத்துநிறைந்த மட்டன் ரசம்....! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
சத்துநிறைந்த மட்டன் ரசம்....!

Sooriyan Gossip - சத்துநிறைந்த மட்டன் ரசம்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
விடுமுறை நாட்களில் தான் நமக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட நேரம் கிடைக்கும். 
அதிலும் நீங்கள் அசைவ பிரியர் என்றால், பல வித்தியாசமான அசைவ ரெசிபிக்களை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

இன்று மட்டனைக் கொண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு மட்டன் ரசம் செய்து கொடுப்பது நல்லது. காரணம் மட்டனில் உள்ள அனைத்து சத்துக்களும் உடலில் சேரும்.

இப்போது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : மட்டன் எலும்புடன் - அரை கிலோ மட்டன் கொழுப்பு - 100 கிராம், பச்சை மிளகாய் - 4 கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி, தக்காளி - 1 மஞ்சள் தூள் - தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி, உப்பு - தேவையான அளவு, கறிவேப்பிலை - 2 கொத்து.

மசாலா அரைக்க : கடலை எண்ணெய் - தேவையான அளவு கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி, சின்ன வெங்காயம் - 8 பூண்டு பற்கள் - 8 சீரகம், மிளகு - தலா 1தேக்கரண்டி. செய்முறை - மட்டனை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிகொள்ளவும்.

பின்பு தக்காளியை விழுதாக அரைத்து கொள்ளவும். ப.மிளகாயை விழுதாக அம்மிகல்லில் நசுக்கி கொள்ளவும். ஒரு பிரஷர் குக்கரில் மட்டன், மட்டன் கொழுப்பை போட்டு அதனுடன் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மூடியை மூடி 4 விசில் வரை வேக வைக்க வேண்டும்.

பின்னர் மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக மிக்ஸியில் சேர்த்து மென்மையான விழுதாக அரைத்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.

பின் பொடியாக நறுக்கி வைத்துள்ள கறிவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அடுத்து அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . சிறிதளவு உப்பு , மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

கடைசியாக வேக வைத்த மட்டனை நீருடன் முழுவதுமாக சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும் . நன்றாக கொதி வந்ததும் கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். இப்போது சூப்பரான மட்டன் ரசம் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top