இயற்கையான முறையில் பாதங்களில் காணப்படும் பித்த வெடிப்பை நீக்குவது பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
இரண்டு தேக்கரண்டி தேனுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெயைக் கலந்து பித்த வெடிப்பு உள்ள பகுதிகளில் பூசி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர பித்த வெடிப்பு நீங்கி பாதங்கள் மென்மையாக இருக்கும்.
பழுத்த வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிதளவு தேனையும் கலந்து பாதங்களில் பூசி 15 நிமிடங்கள் வரை நன்கு காய வைத்த பின்னர் சுத்தமாகக் கழுவிவர பித்த வெடிப்பு இலகுவாக நீங்கும்.
இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு, ஒரு தேக்கரண்டி தேன், இரண்டு தேக்கரண்டி பன்னீர் ஆகியவற்றை சேர்த்து பாதங்களில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் சுத்தமாகக் கழுவ வேண்டும். இது எமது பாதங்களிலுள்ள பித்த வெடிப்பை நீக்கி, பாதங்களைப் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகின்றது.
சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல்லையும் கலந்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவலாம். இது பாதங்களை மென்மையாக வைத்துக்கொள்ளும்.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது பாதங்களைப் பாதுகாத்திடுவோம்.