‘கூழாங்கல்’ திரைப்பட புகழ் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில், நடிகர் சூரி மற்றும் நடிகை அன்னா பென் நடித்துள்ள 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் ரிலீசுக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி இரசிகர்களின் கவனத்தை பெற்ற நிலையில் இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.