முறையான வகையில் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்காமல் இருப்பதனால் சருமம் கருமையாக மாறக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அத்துடன் அதிக வெப்ப காலங்களில் சரும நிறம் கருமையாக மாறுகின்றன. இதனை கவனத்தில் கொள்ளாதவிடத்து, சருமம் சார்ந்த பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
எனவே சருமத்திலுள்ள கருமையை இயற்கையான முறையில் எவ்வாறு நீக்கலாம் என்பதைப் பற்றி இன்றைய அழகுக்குறிப்புப் பகுதியில் தெரிந்துகொள்வோம்.
சிறிதளவு தேங்காய் எண்ணெயுடன் ஒலிவ் எண்ணெய், எள்ளு ஆகியவற்றை சேர்த்து சருமத்திற்கு பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் மிதமான வெந்நீரால் சுத்தமாகக் கழுவ வேண்டும். வாரத்தில் இருமுறை இவ்வாறு செய்துவர சருமத்தில் காணப்படும் கருமை மறைந்து சருமம் பொலிவாகக் காணப்படும்.
தேங்காய் எண்ணெயுடன் சிறிதளவு பன்னீரையும் கலந்து கருமையான பகுதிகளில் பூசி நன்கு மசாஜ் செய்த பின்னர் குளிர்மையான நீரால் கழுவலாம். இது சருமத்தில் காணப்படும் கருமையை நீக்கி சருமத்தைப் பளபளப்பாக வைத்துக்கொள்கின்றது.
எனவே மேற்சொன்ன இலகுவான வழிமுறைகளைப் பின்பற்றி எமது சருமத்தைப் பாதுகாத்துக் கொள்வோம்.