16 ஆண்டுகளுக்கு முன்பு மோசமான உடல்நிலையினால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதன்போது குறித்த அந்த பெண்ணின் உடலில் இருந்து அவரின் இதயம் அகற்றப்பட்டு வேறு ஒருவரின் இதயம் வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தனது சொந்த இதயத்தைப் பார்ப்பதற்காக அண்மையில் அந்த பெண் அவரின் இதயம் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளார்.
பல ஆண்டுகளாக தனக்குள் இருந்த இதயத்தை வெளியில் பார்ப்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் அதை ஒரு பெரும் அதிசயம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
நான் உடல் உறுப்பு தானத்தை ஆதரிக்கிறேன். இது தான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. சுறுசுறுப்பான மற்றும் வேகமான வாழ்க்கையை சிறப்பாக கொண்டு செல்ல உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நமக்குப் பாரியளவில் உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இதயமாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணின் இதயம் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டமை உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிப்பதற்கான முயற்சி என்றும் அவரது சம்மதத்துடனேயே இந்த இதயம் அங்குள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அருங்காட்சியகத்தின் நிருவாகத்தினர் தெரிவித்துள்ளனர்.